நல்லூர்க் கந்தனை தரிசித்தார் ரணில்

வடக்குக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று முற்பகல் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்குச் சென்று பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டார்.

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் நடைபெற்று வருகின்ற நிலையில், வழிபாட்டில் கலந்துகொண்ட ரணில் விக்கிரமசிங்க, அதன்பின்னர் நல்லை ஆதீனத்தில் மதத் தலைவர்களுடன் சந்திப்பில் ஈடுபட்டார்.

பிரதமருடனான பயணத்தின்போது சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ். மாநகர சபை மேயர், பிரதமரின் கீழ்வரும் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி. யாழ். மாநகர ஆணையாளர், யாழ். பிரதேச செயலர் மற்றும் அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்