கப்பற்துறை கிராமத்தில் புதிய வீடமைப்பு திட்டங்கள்

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கப்பற் துறை கிராமத்தில் புதிய வீட்டுத் திட்டத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்வு இடம் பெற்றது.

குறித்த நிகழ்வானது இன்று (15) வியாழக் கிழமை மாலை துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்களால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

வீடமைப்பு நிர்மாணத் துறை அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வரும் செமட்ட செவன திட்டம் ஊடாகவே இத் திட்டமானது தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கண்கானிப்பில் நடை முறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் 50 குடும்பங்களுக்கு புதிய வீடமைப்புத் திட்டம் வழங்கப்படவுள்ளது. இதில் திருகோணமலை மாவட்ட வீடமைப்பு அதிகார சபையின் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்