மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் அன்னதான நிகழ்வு…

கிழக்கிலங்கையில் வரலாற்று பிரசித்தி பெற்று விளங்கும் தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய தீர்த்தோற்சவம் இன்று காலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இடம்பெற்றுள்ளது.

கடந்த மாதம் 25ஆம் திகதி கொடியேற்றத்துடன் உற்சவம் ஆரம்பமாகிய நிலையில் தொடர்ச்சியாக திருவிழாக்கள் நடைபெற்று வந்தன.

கொடியேற்றம் ஆரம்பமாகிய தினத்தில் இருந்து மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலயத்திற்கு பாதயாத்திரையாக பக்தர்கள் பல பாகங்களில் இருந்து வருகைதந்தனர்.

இவர்களின் நலம் கருதி மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி பழைய மாணவர்களால் ஒரு சமூகப்பணியாக அன்னதான நிகழ்வு ஒன்று இன்று வழங்கப்பட்டது.

மேலும் 30.08.2019 ஆரம்பமாகும் ஆயித்தியமலை தேவாலயத்தின் திருவிழாவின் போதும் இதேபோன்ற ஓர் சமூகப்பணியை மேற்கொள்ள உள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்