சிறீதரன் எம்.பியின் அழைப்பை ஏற்று தீவகம் வந்தார் ராஜித!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் தொடர்ச்சியான வேண்டுகோளுக்கு இணங்க சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்கள் நேற்றைய தினம் தீவக பிரதேசங்களிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

குறித்த விஜயத்தின் போது நெடுந்தீவு நயினாதீவு அனலை தீவு  ஊர்காவற்துறை வேலணை ஆகிய வைத்தியசாலைக்கு சென்று அங்கு நிலவும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்தார்.

அங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர்-

2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்கள் இந்தப் பகுதிகளுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு கோரி இருந்தார் இருந்தபோதிலும் என்னால் வரமுடியவில்லை. அதற்காக பாராளுமன்றத்தில் என்னுடன் பலமுறை வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார் நான் இத்தனை ஆண்டுகளாய் இங்கு வரமுடியாமல் இருந்ததைட்டு இன்று மிகவும் வருந்துகிறேன்.அவரிடமும் இந்த மக்களிடமும் மன்னிப்பு கோருகிறேன்

குறித்த சந்திப்பில் சுகாதார அமைச்சருடன் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் யாழ் பிரதிப்பிராந்திய சுகாதார சேவைகள்  பணிப்பாளர் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் உறுப்பினர்கள் வைத்தியசாலைகளின் பொறுப்பதிகாரி கள் தாதியர்கள் பணியாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்