மாவட்ட பொதுவைத்தியசாலையாக மந்திகையை தரம் உயர்த்துக! – சுமன்

பருத்தித்துறை மந்திகை ஆதார வைத்தியசாலையில் நெதர்லாந்து அரசின் நிதி உதவியுடன் அமைக்கப்பட இருக்கின்ற அவசர சிகிச்சை நிலையக் கட்டடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் பருத்தித்துறை மந்திகை ஆதார வைத்தியசாலையை மாவட்ட பொது வைத்தியசாலையாகத் தரம் உயர்த்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கையை முன்வைத்தார்.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சுகாதார அமைச்சர், அதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்