வடமாகாணம் முழுவதுமாக நடாத்தப்பட்ட இலவச கல்வி கருத்தரங்கு

வடமாகாணம் முழுவதுமாக பத்து இடங்களில் நடை பெற்ற இலவச கல்வி கருத்தரங்கில் பதினெட்டாயிரத்துக்கும அதிகமான மாணவர்கள் பங்கு பற்றி பயன் பெற்றனர்.

யாழ் வீரசிங்க மண்டபத்தில் மூன்று நாட்களும் ஊர்காத்துறை ஒரு நாள் வட்டுக்கோட்டை தொழில் நுட்ப்ப கல்லூரியில் ஒரு நாள், சிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் ஒரு நாள் ,முள்ளியவளை ஊற்றங்கரை பிள்ளையார் ஆலய திருமண மண்டபத்தில் ஒரு நாள் ,மாங்குளம் தொழில் நுட்ப்ப கல்லூரியில் ஒரு நாள் வவுனியா தொழில் நுட்ப்ப கல்லூரியில் ஒரு நாள் மன்னார் நகர சபை கலாசார மண்டபத்தில் இறுதி நாள் கருத்தரங்கு இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வு சட்டத்தரணி வே. தேவசேனாதிபதி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதில் வன்னி மாவட்ட பா.ம.உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மன்னார் வலய கல்வி பணிப்பாளர் உதவி வலய கல்விப்பணிப்பாளர் சிறப்பு அதிதிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வை இலவசமாக நடாத்தியவர் சட்டத்தரணி திரு வே. தேவசேனாதிபதி என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்