வாழ்வோம் வளம்பெறுவோம் – கட்டம் 26இல் 21 குடும்பங்கள் உள்ளீர்ப்பு

முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா – ரவிகரனால் முன்னெடுக்கப்படும் வாழ்வோம் வளம்பெறுவோம் செயற்றிட்டத்தின் இருபத்தாறாம் கட்டமானது கடந்த 14.08.2019 அன்று, முல்லைத்தீவு – கள்ளப்பாடு வடக்குப் பகுதியில் அமைந்துள்ள அவரின் மக்கள் தொடர்பகத்தில் இடம்பெற்றது.

புலம்பெயர் அன்பர்களின் பங்களிப்பில் முன்னெடுக்கப்படும் இச்செயற்றிட்டத்தின் இருபத்தாறாம் கட்டத்தில் தாயகத்தைச்சேர்ந்த இருபத்தொரு குடும்பங்கள் உள்ளீர்க்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் மேலும் அறியவருகையில்.

வாழ்வோம் வளம்பெறுவோம் என்ற பெயரிலான செயற்றிட்டமானது குறுங்கால வாழ்வுடமை ஊக்குவிப்பு நோக்கில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

குறித்த செயற்றிட்டமானது ரவிகரனால் கடந்த 17.05.2014அன்றைய நாள் முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டது.

அந்தவகையில் புலம்பெயர்ந்து வாழும் அன்பரின் பணப்பங்களிப்பில் நடைபெற்று முடிந்த இருபத்தாறாங் கட்டத்துடன் இது வரையில் எண்ணூற்று எழுபத்து மூன்று குடும்பங்கள் உள்ளீர்க்கப்பட்டிருப்பதாக துரைராசா ரவிகரன்தெரிவித்துள்ளார்.

இக்கட்டத்திற்காக புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் வாழும் சுதாகர் – சுகந்தினி குடும்பத்தினர் இவ்வுதவிகளை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் இந் நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரனும் கலந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்