நுண் கடனால் சமூகத்தில் ஏற்படும் பிரச்சினைகளைச் சொல்லும் ‘றணம்’ குறும்பட வெளியீடு

சம காலத்தில் சமூகத்தின் மத்தியில் பாரியதொரு பிரச்சினையாக உருவெடுத்திருக்கும், நுண் கடனால் சமூகத்தின் மத்தியில் ஏற்டும் பிரச்சினைகளை கூறும் ‘றணம்’ குறும்படம் வெளியிடப்பட்டது.
இந் நிகழ்வின் முதன்மை விருந்தினராக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்கள் கலந்துகொண்டார்.
கடந்த 14.08.2019 அன்று, முல்லைத்தீவில் மிகவும் பின்தங்கிய கிராமமான ஆறுமுகத்தான் குளம் கிராமத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வை, குறித்த குறும்பட இயக்குனர் வல்லிபுரம் பிரகலாதன் தலைமையேற்று நடாத்தினார்.
விருந்தினர் வரவேற்புடன் தொடங்கிய இந் நிகழ்வில் தொடர்ந்து, மங்கல விளக்கேற்றல் இடம்பெற்தையடுத்து ‘றணம்’ குறும்நடம் வெளியிடப்பட்டது.
தொடர்ந்து விருந்தினர்களுக்கு குறித்த குறும்படத்தின் இறுவெட்டுக்கள் கையளிக்கப்பட்டன, குறும்படத்தின் முதல் இறுவெட்டினை முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் அவர்கள், இயக்குனர் பிரகலாதனிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
இவற்றினையடுத்து விருந்தினர்களது உரைகள், இயக்குனர் உரை மற்றும் படக்குழுவினரது அறிமுகம் என்பனவும் இடம்பெற்றன.
இந் நிகழ்வில் விருந்தினர்களாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்கள், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சி.லோகேஸ்வரன், குமுழமுனை கிராம அபிவிருத்திச்சங்கத் தலைவர் இ.மயூரன், ஆறமுகத்தான் குளம் கிராம அலுவலர் ப.தர்சன், சமூக ஆர்வலர் ரமேஸ் ஆகியோர் கலந்துகொண்டதுடன், கிராம மக்கள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்