காணிவிடுவிப்புக்கு எழுத்துமூல உடன்பாடு வழங்கியபின்னர் ஏமாற்றினார் ஜனாதிபதி!

ரணில், ஆளுநர்முன் சீற்றத்துடன் சுமந்திரன்

இராணுவம் ஆக்கிரமித்துள்ள தனியாரின் காணிகள் அனைத்தையும் விடுவிப்பேன் என எழுத்து மூலம் தமிழ் மக்களுக்குத் தான் வழங்கிய உறுதிமொழியை ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தானே தூக்கிக் கடாசிவிட்டார் என்று நேற்றுப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன்ராகவன் ஆகியோர் முன்னிலையில் வைத்துப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டிய சுமந்திரன் எம்.பி., இது விடயத்தில் ஜனாதிபதி தமிழ் மக்களை ஏமாற்றி விட்டார் என்றும் விசனம் தெரிவித்தார்.

நேற்று யாழ். செயலகத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற யாழ். மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட் டத்திலேயே இவ்வாறு பகிரங்கமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சாடினார் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்.

காணி விடுவிப்பு விவகாரம் நேற்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டபோது. இராணுவ ஆக்கிரமிப் பில் உள்ள தனியார் காணிகள் இன்னும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை என்று சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

விடுவிக்கப்படாமல் எஞ்சியுள்ள காணிகள் தொடர்பில் பாதுகாப்பு நிலைவரங்களை ஆராய்ந்தே அவற்றைவிடுவிப்பது தொடர்பில் இராணுவம் தீர்மானம் எடுக்கும் என்று இராணுவத் தரப்பில் கூறப்பட்டது.

இதையடுத்து சீற்றத்துடன் கருத்து வெளியிட்டார் சுமந்திரன் எம்.பி.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது வேட்பாளர் என்ற முறையில் பல உறுதிமொழிகளைவாய் மூலம் மைத்திரிபால சிறிசேன விடுத்தாராயினும், அவர் எழுத்து மூலம் தந்த உறுதிமொழி ஒன்றே ஒன்றுதான். அது, ”படையினர் ஆக்கிரமிப் பில் இருக்கும் சகல தனியார் காணிகளும் அவற்றின் சொந்தக் காரர்களிடம் மீளளிக்கப்படும்” என அவர் எழுத்து மூலம் ஒப்ப மிட்டு உறுதியளித்தார்.

அவர் தமிழ் மக்களுக்கு எழுத்து மூலம் அளித்த அந்த வாக்குறுதியை அவர் தூக்கி கடாசி, தமிழ் மக்களை ஏமாற்றி விட்டார் என்பதையே படைத்தரப் பின் இந்தப் பதில் உறுதிபடுத்துகின்றது.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் இந்த வாக்குறுதியை எழுத்து மூலம் வழங்கிய ஜனாதிபதியிடம், அதனைப் பலதடவைகள் சுட்டிக்காட்டி, நினைவுபடுத்தினோம்.

இதன் பின்னர், படை அதி காரிகள், மக்கள் பிரதிநிதிகளை எல்லாம் கூட்டி வைத்து அவர் சந்திப்புகள், மாநாடுகளை நடத்தினார். படைகள் வசம் இருக்கும் தனியார் காணிகள் எல்லாம் 2018 டிசெம்பர் 31 இற்கு முன்னர் கையளிக்கப்படும் என்று காலக்கெடு குறிப்பிட்டு அங்கு அறி விப்புக்களை எல்லாம் விடுத்தார்.

படை அதிகாரிகளும் அதை செவிமடுத்து இசைவு தெரிவித்தனர்.

இவ்வளவு எல்லாம் நடந்த பின்னர், இன்னும் விடுவிக்கப்படாமல் இருக்கும் காணிகள் தொடர்பில், பாதுகாப்புநிலைவரங்களை ஆராய்ந்த பின்னர் அவற்றை விடுவிப்பதா என்பது குறித்துப் படை அதிகாரிகள் தீர்மானிப்பர் என்று கூறுகின்றமை , தமிழ் மக்களுக்குத் தாம் எழுத்து மூலம் வழங்கிய வாக்குறுதியை ஜனாதிபதிமைத்திரிபால தூக்கிக் கடாசி, தமிழர்களை ஏமாற்றிவிட்டார் என்ற அர்த்தத்தையே தந்து நிற்கின்றது.

படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட தனியார் காணிகளை விடுவிப்பது என்பது அரசின் கொள்கை ரீதியான தீர்மானம். அரசின் கொள்கை ரீதியான முடிவை நடைமுறைப்படுத்துவதுதான் படைத்தரப்பு உட்பட அரசுக் கட் டமைப்புகளின் கட்டாயப்பொறுப்பு. அரசின் கொள்கை ரீதியான தீர்மானத்தை செயற்படுத்தாமல் அரச பிரிவு ஒன்று அதைக் கேள்விக்கும் சவாலுக்கம் உட் படுத்த முடியாது.

அப்படி அரசின் ஒரு பிரிவு – படைத்தரப்பு – அத்தகைய முடிவு ஒன்றைக் கேள்விக்கு உட்படுத்துமானால், அந்த முடிவு அரசின் கொள்கை ரீதியான முடி வாக இருக்கமுடியாது. இதுதான் நிலைமை.

இராணுவம் ஆக்கிரமித்த தனியார் காணிகளை அனைத்தையும் மீளளிப்பது என்ற தமது வாக்குதியை, அரசின் கொள்கை முடிவாக ஜனாதிபதி முன்வைக்கவில்லைப்போலும். அதனால் தான் படைகள் அவ்விடயத்தில் தம்மிஷ்டப்படி தீர்மானிக்க முய லுகின்றன. – எனக் கடுமையாகச் சாடினார் சுமந்திரன்.

சுமந்திரனின் கடுஞ் சீற்றத்தைக் கூட்டத்துக்குத் தலைமை வகித்த ரணில் விக்கிரமசிங்க பதில் கூறாமல் செவிமடுத்தார். ஆளுநர் சுரேன்ராகவன் சில கருத்துக்களை முன்வைத்தாராயினும் அவருக்கும் பதிலடி கொடுத் தார் சுமந்திரன்.

“நீங்கள்தான் ஆளுநர்தான். இங்கு ஜனாதிபதியின் பிரதிநிதி. நாங்கள் வெளியிட்ட கவலையை – எங்கள் குற்றச்சாட்டை – ஜனாதி

பதியிடம் எடுத்துச் சென்று தெரிவியுங்கள்!” – என்றார் சுமந்திரன்.

அப்படியே தாம் இந்த விட யத்தை ஜனாதிபதியின் கவனத் துக்குக்கொண்டு செல்வார் எனப் பதிலளித்தார் ஆளுநர் சுரேன் ராகவன்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்