வெளியாள்கள் இங்கு நியமனம் ரணிலிடம் சி.வீ.கே. ஆட்சேபம்!

 வடக்கு மாகாணத்துக்கும் யாழ். மாவட்டத்துக்கும் வெளியே இருக்கும் பலர் இங்குள்ள அரச அலுவலகங்களின் சிற்றூழியர்வெற்றிடங்களுக்கு பெரும் எண்ணிக்கையில் வலிந்து வேண்டுமென்றே நியமிக்கப்படுகின்றார்கள். இந்த அத்துமீறல் நிறுத்தப்படவேண்டும். இது தொடர்பில் ஒரு கொள்கை நிலைப்பாட்டை இங்கு பிரதமர் எடுத்து அதனை வழிகாட்டல் ஏற்பாடாக அறிவிக்கவேண்டும்.

– இப்படிப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்றுயாழ். செயலகத்தில் நடை பெற்ற யாழ். மாவட்ட அபிவிருத் திக்குழுக்கூட்டத்தில் கோரிக்கை விடுத்தார் வடக்கு மாகாண சபை யின் அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம்.

வடக்கு ஆஸ்பத்திரிகளுக்குப் பெரும் எண்ணிக்கையான சிற்றூழியர்கள் வெளியில் இருந்து கொண்டு வந்து நியமிக்கப்படு கின்றார்கள்.

ஒவ்வொரு அமைச்சும் ஒவ்வொரு திணைக்களமும் இங்கு அதனைத்தான் செய்கின்றன. சிற்றூழியர்கள், காவலாளிகள் போன்ற பதவிகளுக்கு வெளியில் இருந்து ஆள்கள் இங்கு நியமிக்கப்படுகின்றார்கள். இங்கு போதிய ஆள்கள் – இளைஞர்கள் – இந்த வேலையைச் செய்யக் கூடியவர்கள் – தாரளமாக உள்ளனர். எங் கள் இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி இருக்கையில் இப்படி பிற இடங்களில் இருந்து ஆள்களைக் கொண்டுவந்து இங்குள்ள வெற்றிடங்களுக்கு நிரப்புகின்றமை எமக்குச் செய்யப்படும் பெரும் அநீதியாகும். இது தொடர்பில் பிரதமர் திட்டவட்டமான ஒரு கொள்கை நிலைப்பாட்டை எடுத்து அதனை இங்கு அறிவிக்கவேண் டும். இந்தத் தவறான நடைமுறை யைத்தடுத்து நிறுத்துவதற்கான உத்தரவு உடன் வழங்கப்பட வேண்டும் – என்றும் சிவஞானம் கோரினார்.

அவரின் கோரிக்கையை நேற்றுப் பிரதமர் உன்னிப்பாக செவிமடுத்துக் கவனத்தில் எடுத் தாராயினும் அவ்விடயம் தொடர் பில் அவர் பிரதிபலிப்பு ஏதும்காட் டவும் இல்லை ; உத்தரவு, பணிப் புரை ஏதும் விடுக்கவுமில்லை .

வெளிமாகாணம், வெளி மாவட்டங்களில் இருந்து ஆள்கள் கொண்டுவரப்பட்டு இங்குள்ள அரசவெற்றிடங்களுக்கு நியமிக் கப்படுகின்றமையை அனுசரிக் கின்றமை போல பிரதமர் நடந்து கொண்டார்.

யாழ். மாவட்ட நாடாளுமன்றப் பிரநிதிகளில் மாவை சேனாதிராசா மட்டும் சிவஞானத்தின் கருத்தை தலையசைத்து ஆமோதிப்பவர் போல பிரதிபலிப்புக் காட்டினார். ஏனைய எம்.பிக்கள் இந்த விட யம் குறித்து தங்கள் கருத்தைப் பதிவுசெய்யவில்லை. மௌனம் சாதித்துப்பிரதமரின் மௌனத்தை அங்கீகரிப்பவர்கள் போல நடந்த கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்