யாழ் நாவாந்துறை இறைச்சிக்கடை தொகுதிகளை திறந்துவைத்தார் முதல்வர் ஆனல்ட்

யாழ் மாநகரசபையின் முத்திரை தீர்வையின் கீழ் 4.68 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்பட்ட யாழ் நாவாந்துறை இறைச்சிக்கடை தொகுதி இன்றய தினம் (17) உரிய கடைப் பொறுப்பாளர்களிடம் கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்ததுடன், கடைகளையும் திறந்து வைத்தார்.

குறித்த நிகழ்வில் கௌரவ யாழ் மாநகர சபை உறுப்பினர்கள், யாழ் மாநகர பொறியியலாளர், மாநகரசபை உத்தியோகத்தர்கள், கடைப் பொறுப்பாளர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் முதல்வர் அவர்கள் ‘மிகவும் சிறந்த முறையில் புதிதாக புனரமைக்கப்பட்டுள்ள கடைகளை மிகவும் தூய்மையான முறையில் பாதுகாப்பாக பயன்படுத்தப்படுவதை கடை நடாத்துனர்களும் – மாநகரசபையும் உறுதிப்படுத்தல், பொது மக்களுக்கு தூய்மையான முறையில் இறைச்சிகளை விற்பனை செய்வதை உறுதிப்படுத்தல்’ என்ற தொனிப்பொருளில் உரை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்