மதுபோதையில் வாகனம் செலுத்திய 129 சாரதிகள் கைது!

மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் மதுபோதையில் வாகனம் செலுத்திய மேலும் 129 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையான 24 மணிநேர காலத்தில் குறித்த 129 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 5 ஆம் திகதி மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பமான தினத்தில் இருந்து இதுவரை 8 ஆயிரத்து 993 வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்