கந்தளாயில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம்

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனமொன்று வயல் வெளியில் விழுந்ததில் டிப்பர் வாகனத்தின் சாரதி பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கந்தளாய் கெமுனு மாவத்தை பகுதியைச் சேர்ந்த ரொசான் சிறிமேவன் வயது(37) என்பவரே காயங்களுக்குள்ளான சாரதியாகும்.இவ்விபத்துச் சம்பவம் இன்று(18) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கந்தளாய் நகரிலிருந்து மணல் ஏற்றுவதற்காக கங்கைப் பகுதிக்குச் சென்ற போதே வேக கட்டுப்பாட்டை இழந்து வயல் வெளிக்குள் குடைசாய்ந்ததாகவும் இதனால் சாரதிக்கு கழுத்து முறிவு மற்றும் காயங்கள்  ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்