பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசனின் நிதி ஒதுக்கீட்டில் குமாரபுரம் குறுக்கு வீதி புனரமைப்பு

பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசனின் நிதி ஒதுக்கீட்டில் குமாரபுரம் குறுக்கு வீதி புனரமைப்பு…

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட மாமாங்கம் குமாரபுரம் முதலாம் குறுக்கு வீதியானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட கம்பெரலிய நிகழ்ச்சித் திட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் கொங்கிறீட் வீதியாகப் புனரமைக்கும் பணிகள் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

மாமாங்கம் வட்டாரத்தின் உறுப்பினர் பு.ரூபராஜ் அவர்களால் பாராளுமன்ற உறுப்பினரிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க மேற்படி வீதி புனரமைப்பிற்காக கம்பெரலிய திட்டத்தினூடாக 1.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி இவ்வீதி புனரமைப்பு பணிகள் மட்டக்களப்பு மாநகரசபையினூடாக இன்று ஆரம்பிக்கப்பட்டது.

இவ்வீதி அபிவிருத்தி செயற்திட்டத்தினை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், மாநகர முதல்வர் தி.சரவணபவன், மாநகரசபை உறுப்பினர்களான பு.ரூபாராஜ், து.மதன், மாநகர பொறியிலாளர் திருமதி. சித்திராதேவி லிங்கேஸ்வரன் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ராஜ்குமார் ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்