யாழ் நாவாந்துறை சந்தைக்கு முதல்வர் ஆனல்ட் கள விஜயம்

யாழ் நாவாந்துறை சந்தைக்கு நேரடி விஜயம் ஒன்றை இன்றய தினம் (17) மேற்கொண்ட யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் மரக்கறி மற்றும் இறைச்சி விற்பனை நிலையங்களை பார்வையிட்டதுடன், குறித்த நிலையங்களை நடாத்துவதில் வியாபாரிகள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் குறைபாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.

மேலும் சந்தையின் சுற்றுப்புறம் மற்றும் மலசல கூடங்களின் சுத்தம் தொடர்பிலும் முதல்வர் அவதானம் செலுத்தியிருந்ததுடன், அவற்றில் உள்ள குறைபாடுகளை உடன் நிவர்த்திக்குமாறும் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

குறித்த நேரடி விஜயத்தில் முதல்வருடன் யாழ் மாநகர பொறியியலாளர்கள், யாழ் மாநகர பொதுச்சுகாதார பொறியியற் பிரிவின் அதிகாரிகள், சுகாதாரப்பகுதி உத்தியோகத்தர்கள், மாநகரசபை அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினரும் இணைந்திருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்