வெள்ளை வேன் அப்பாவி மக்களை கடத்தவில்லை .சிவப்பு பஸ் தான் எம்மை தாக்கியது

வெள்ளை வேன் அப்பாவி மக்களை கடத்தவில்லை .சிவப்பு பஸ் தான் எம்மை தாக்கியது  என முபாற‌க் அப்துல் மஜீத் மௌல‌வி தெரிவித்துள்ளார்.

முஸ்லீம் உலமா கட்சி சனிக்கிழமை(17) மாலை நடாத்திய ஊடக சந்திப்பு ஒன்றில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்

வெள்ளை வேன் அப்பாவி மக்களை கடத்தவில்லை .சிவப்பு பஸ் தான் எம்மை தாக்கியது .அண்மைக்காலமாக வெள்ளை வேன் சம்பந்தமாக பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடிஸ்வரன் கதைக்கின்றார்.தற்போது வெள்ளை வேன் பிரச்சினை இல்லை.சிவப்பு பஸ் தான் பிரச்சினை.முஸ்லீம் மக்களை தாக்கியது சிவப்பு பஸ்ஸில் வந்தவர்கள்.எனவே வெள்ளை வேன் பெரியதா அல்லது சிவப்பு பஸ் பெரிதா என கேட்க விரும்புகின்றேன்.

புலிகள் இந்த வெள்ளை வேனில் எத்தனை அப்பாவிகளை கடத்தினார்கள்.ஆனால் கிழக்கில் எந்தவொரு அப்பாவிகளையும் கடந்த கால அரசாங்கம் வெள்ளை வேனை பயன்படுத்தி கடத்தவில்லை.இதுவெல்லாம் வீண் பிரச்சாரங்கள் செய்கின்றார்கள்.முஸ்லீம் மக்களை இந்த பிரச்சினைக்குள் இழுக்க வேண்டாம் என சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரை கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்