தமிழ்ச் சமூக மையம் அமைப்பதற்கான பொதுக் கூட்டம் ஆவணி 18ம் திகதி

ரொறன்ரோ, ஒன்டாரியோ – தமிழ்ச் சமூக மையம்  ஒன்றை அமைப்பதற்கான முன்னெடுப்புகளை எடுத்து வருகின்ற வழிப்படுத்து குழுவினரின் இற்றை வரையான முன்னெடுப்புகளை பொதுமக்கள் பார்வைக்கும், கருத்துக்கும் முன்வைக்கும் பகிரங்க பொதுக்கூட்டம்  ஆவணி 18ம் திகதி ஞாயிறு  பிற்பகல் 2 மணிக்கு  ஸ்காபரோ நகரசபை  மண்டபத்தில்,  நடைபெறும். அதற்கான அறிவித்தல் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

நடத்துவது யார்:  தமிழ் சமூக மையம் வழிப்படுத்து குழு

பேசு பொருள்: சமூக மைய திட்டத்தின் இன்று வரையான முன்னெடுப்புகள்

எங்கே: ஸ்காபரோ நகரசபை மண்டபம், ரொறன்ரோ, 150 பொரோ டிரைவ், ஸ்காபரோ, ஒன்டாரியோ

எப்போது: ஆவணி 18ம் திகதி ஞாயிறு, பிற்பகல் 2 மணிக்கு

இத்திட்டத்தின் பரிந்துரைக்கப்பட்ட பணி அறிக்கை, மற்றும் பரிந்துரைக்கப்பட்ட நிர்வாக, மேலாண்மைக் கட்டமைப்புகள், தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் ஈடுபாடும் நிலைப்பாடும், நிதி மாதிரி குறித்த ஆராய்ச்சியின் நிலை, இணையத்தளம் மூலமான ஆலோசனை கோரலில் திரட்டிய தகவல்களின் முடிவுகள், அடுத்த இரண்டு வருடங்களுக்கான கால அட்டவணை ஆகியவை வழிபடுத்து குழுவால் பொதுமக்களுக்கு சமர்பிக்கப்படும்.

tamilcentre.ca எனும் இணையத்தளத்தில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்வதன் மூலம் தமிழ்ச் சமூக மைய கட்டிடத்தின் நிரலாக்கத்தை நிர்ணயிக்க உதவுமாறு வழிப்படுத்து குழு பொதுமக்களைக் கேட்டுக்கொள்கின்றது.   தமிழ்ச் சமூக மையம் அமைப்பதற்கான திட்டத்தின் இன்று வரையான செயற்பாடுகளைப் பொதுமக்கள் சமூகத்துக்கு வெளிப்படையாக அறிவிக்கும் நோக்கத்துடன் இந்த இணையத்தளத்தில் சகல கூட்ட நடவடிக்கைக் குறிப்புகளும், ஆட்சி ஆவணங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த தளத்தையும், தகவலையும் உங்கள் ஊடகத்தில் பகிர்ந்துகொள்வதன் மூலம் ஆலோசனை கோரல் படிவம் உள்ள எமது இணையத்தள த்தை உங்கள் வாசகர்களிடம் எடுத்துச் செல்லவும், பரப்பவும், அவர்களை அடுத்துவரும் இந்தப் பொது கூட்டத்தில் பங்கு பற்றவும் ஊக்குவித்து உதவுமாறு தமிழ்ச் சமூக மையம் அமைப்பதற்கான வழிப்படுத்து குழுவானது ஊடகங்களை வேண்டிக்கொள்கின்றது.

2019 பங்குனி மாதத்தில் ரொறொன்ரோ பெரும்பகுதியைச் சேர்ந்த தமிழ்ச் சமூகமும் அதன் அமைப்புகளும் ஒன்றிணைந்து தமிழ் சமூக மையம் ஒன்றை உருவாக்கும் படிமுறையை முன்னெடுக்கும் நோக்கத்துடன் கருத்து ஒருமித்துப்  பங்குகொண்டனர். இந்நிகழ்வில் தமிழ் சமூக மையத்தின் வடிவமைப்பு, கட்டுமானம், இயங்குமுறை ஆகியவற்றின் செயலாக்கப் படிமுறையை ஆரம்பித்து முன்னெடுக்க வழிப்படுத்து குழுவொன்று தமிழ்ச் சமூகத்தால் தேர்வு செய்யப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்