கோட்டாவுக்கு ஆபத்து; அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை!

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராபக்ஸவின் பாதுகாப்பு பிரச்சினைக்குரியதாக மாறியுள்ளது. முதலாவது பொதுக் கூட்டத்திலேயே அதனை நாம் கண்டோம். இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு கணிப்பீடொன்றை மேற்கொண்டு தேவையான பாதுகாப்பை வழங்கும் என எதிர்பார்க்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஸ என்பவர் பயங்கரவாத யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த முக்கிய நபர் என்பதை யாரும் அறிவர். இதனால், இவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பது ஜனாதிபதி வேட்பாளர் என்பதனால் மாத்திரம் அல்ல என்பதை நாம் அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும். இது குறித்து பொதுஜன பெரமுன பாதுகாப்பு அமைச்சிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் கெஹெலிய எம்.பி. மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையில் அமைக்கப்படும் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கூட்டணிக்கான யாப்பொன்றைத் தயாரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சகல கட்சிகளினதும் அபிப்பிராயங்களை உள்ளடக்கியதாக இந்த கூட்டணி அரசியல் யாப்பு காணப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்