கூட்டமைப்பை சந்தித்து பேச கோட்டா விருப்பம்!

தமிழ் மக்களின் வாக்குகள் கிடைப்பது மிகக் கடினம் என தான் கோட்டாவிடம் தெளிவாக எடுத்து கூறியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்தன் தெரிவித்துள்ளார்.

மஹிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவை கடந்த வாரம் தர்மலிங்கம் சித்தார்தன் சந்தித்து பேசியிருந்தார்.

இந்தநிலையில் குறித்த சந்திப்பு தொடர்பாக வினவப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘ஜனாதிபதியாவதற்கு தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவது அவசியம் என கோட்டாவிடம் கூறினேன்.

இதற்கமைய வெகுவிரைவில் சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பை சந்திக்க விரும்புவதாக கோட்டாபய என்னிடம் கூறினார்.

மொத்தத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு யார் தீர்வை வழங்க போவதாக கூறுகின்றாரோ அவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த நாம் தயார்.

வெறுமனே எங்களுக்குள்ளேயே பேசிக்கொண்டிருப்பதால் பிரியோசனம் இல்லை. மக்கள் விடுதலை முன்னணியுடனும் பேசி பார்த்து முடிவு எடுக்க உள்ளோம்’ என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்