புதிய அரசமைப்பின் பின் ஜனாதிபதித் தேர்தல் ஐரோப்பிய ஒன்றியத்திடம் சம்பந்தன் கோரிக்கை

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாம் மக்களுக்கு அளித்த வாக்குறுதி புதிய அரசமைப்பு உருவாக்கப்படும் என்பதாகும். அதற்கான முயற்சிகள் மந்தகதியிலேயே நகருகின்றன. ஆகவே புதிய அரசமைப்பு உருவாக்கப்பட்டு, மத்தியில் குவிந்துள்ள அதிகாரங்கள் மாகாணங்களுக்குப் பகிரப்பட்டதன் பின்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதே சிறந்தது.

– இவ்வாறு ஐரோப்பிய ஒன்றியத்திடம் வலியுறுத்தியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் என கொழும்பு சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தேர்தலை தடுத்து புதிய அரசியல் யாப்பொன்றின் மூலம் வடக்கு, கிழக்கு மக்களுக்கு அதிகாரத்தைப் பெற்றுத் தருமாறு இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்குமாறும், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மக்கள் நூற்றுக்குத் 90 வீதம் புதிய அரசியலமைப்பைப் பெற்றுத் தருவதாக கூறியதற்கே இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்தனர்.

இதனால், ஐரோப்பிய ஒன்றியம் தமது அதிகாரத்தைப் பிரயோகித்து இந்த ஜனாதிபதித் தேர்தலை நிறுத்திவிடுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு பிரதானி ரிகாடோ செல்லெறி தலைமையிலான தூதுக் குழுவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இந்த அரசாங்கம் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையைக் கூட நீக்கவில்லை எனவும் புதிய அரசியலமைப்பு அமைக்கும் பணியை அரசாங்கம் ஒத்திவைத்துள்ளதாகவும் ஆர். சம்பந்தன் எம்.பி. மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்