ஜே.வி.பி.யின் தேசிய மக்கள் சக்தி கூட்டம்: அலையென திரளும் மக்கள்

மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் தேசிய மக்கள் சக்தி கூட்டம் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.

காலி முகத்திடலில் ஆரம்பமாகவுள்ள இக்கூட்டத்தில் 20 வருடங்களின் பின்னர் மக்கள் விடுதலை முன்னணியால் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார்.

அத்துடன், தேசிய மக்கள் சக்தி இயக்கம் என்ற பெயரில் 28 பொது அமைப்புக்களை உள்ளடக்கியதாக, ஒரு மக்கள் படையணியும் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது.

வேட்பாளர் அறிவிப்பை எதிர்பார்த்து காலி முகத்திடலில் கட்சியின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் கூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்