வேட்பாளரானார் கோட்டா….! மோட்டார் சைக்கிளை இழந்தார் ஐ.தே.க. ஆதரவாளர்…!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டமையினால் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர் ஒருவர் மோட்டார் சைக்கிளை இழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷவை பெயரிடுவார்களா? இல்லையா? என நாகொட பிரதேச சபை ஊழியர்கள் இருவர் பந்தயம் வைத்தனர்.

இதற்கமைய பந்தய ஒப்பந்தமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர் 150,000 ரூபாயையும் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர் தனது மோட்டார் சைக்கிளையும் வழங்க ஒப்புக் கொண்டனர்.

இதனை அடுத்து கடந்த 11 ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டமையினால் பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர் வெற்றிபெற்றார்.

இருப்பினும் தனது நண்பரின் மோட்டார் சைக்கிளை பெற்றுக்கொள்ள தயக்கம் காட்டிய பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர், அதற்கு மாற்றீடாக ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளரை அவரது சொந்த கிராமத்தில் கோட்டாவை வாழ்த்தி ‘வாழ்த்து பதாகை’ அமைக்குமாறு கேட்டுகொண்டார்.

இதனால் தனது மோட்டார் சைக்கிளை ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளரினால் காப்பாற்ற முடிந்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்