விசுவமடு மத்திய வி.கழகத்துக்கு சாள்ஸ் உதவி!

விசுவமடு மத்திய விளையாட்டு கழகத்தின் மைதான அறிமுக விழா-2019.08.17 அன்று நடைபெற்றது.அமரர். சுந்தரலிங்கம் நிருபரன் அவர்களின் ஞாபகார்த்த விலகல் முறையான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி விசுவமடு மத்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இவ் விளையாட்டுக் கழகத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சாள்ஸ் நிர்மலநாதன் அவர்கள் 5 லட்சம் ரூபாவை கிராமிய துரித அபிவிருத்தி திட்டத்தினூடாக இவ் விளையாட்டுக் கழகத்திற்கு வழங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் திருகோணமலை மாவட்டத்தை சேர்த்த புதுமலர் விளையாட்டுக்கழகத்தினர் வெற்றி கிண்ணத்தை சுவீகரித்து கொண்டனர். இவ் விளையாட்டு மைதானம் அமைய காரணமாக இருந்த அனைவருக்கும் இக் கிராம மக்கள் நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்