பொலீஸ் நிர்வாகம் மற்றும் குற்றவியல் துறையில் இப்பிராந்தியத்தில் முதன்முறையாக பட்டப்படிப்பை சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.கே. இப்னு அஷார் பூர்த்தி செய்துள்ளார்

பொலீஸ் நிர்வாகம் மற்றும் குற்றவியல் துறையில் அம்பாறை பிராந்தியத்தில் முதன்முறையாக பட்டப்படிப்பை சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.கே.இப்னு அஷார் பூர்த்தி செய்துள்ளார்.

நேற்று (17) கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்பட்டமளிப்பு விழா வைபவத்தில் இப்னு அஷார் இப்பட்டத்தினை பெற்றுக் கொண்டார்.

இவர் சிம்ஸ் – (CIMS) கெம்பஸ் சாய்ந்தமருது ஊடாக இந்தியா கான்பூர் பல்கலைக்கழகத்தில் இப் பட்டப் படிப்பினை மேற்கொண்டார்.

பாலமுனையை பிறப்பிடமாகவும், சாய்ந்தமருதை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் பொலிஸ் துறையில் 1989 ஆம் ஆண்டு இணைந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்