கிண்ணியா வலய ஆசிரியர்கள் பற்றாக்குறை தொடர்பில் பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் மாகாண கல்வி அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடல்

கிண்ணியா கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியப் பற்றாக்குறை தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது.
கிண்ணியா வலய அதிபர் சங்கத்தின் ஏற்பாட்டிலும் பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தலைமையிலும் குறித்த கலந்துரையாடல் இன்று (19) கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்தில்  மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட குழுவினருக்கும் பிரதியமைச்சர் தலைமையிலான குழுவினருக்கும் இடையில் இச்  சந்திப்பு இடம் பெற்றது
ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதால் மாணவர்களின் கல்வி வீழ்ச்சியில் பாரிய குறைகள் காணப்படுவதாகவும் மாகாண கல்வி அமைச்சின் செயலாளரிடம் எடுத்துரைக்கப்பட்டது
கிண்ணியா கல்வி வலயம் 99 ஆவது இடத்தில் கல்வியில் பின்னடைந்துள்ளது இதற்காக தொடர் விடா முயற்சியாக கல்விக்கான குழுவினூடாக முன்னெடுப்புக்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வரவேண்டும் இதற்காக சகல கல்வி உயரதிகாரிகளும் செயற்பட்டு தங்களை அர்ப்பணிக்க வேண்டும் இவ்வாறான சந்திப்புக்கள் இரு வாரங்களுக்கு ஒரு முறை இடம் பெற்று வருவதுடன் தொடராக கல்வி மதிப்பீட்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் மாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கும் பணிப்புரை விடுத்தார் .
குறித்த சந்திப்பில் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜீ.முதுபண்டா,மாகாண கல்வி பணிப்பாளர் மன்சூர்,கிண்ணியா நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம்,கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் எச்.எம்.சனூஸ்,தம்பலகாம பிரதேச சபை தவிசாளர் எஸ்.எம்.சுபியான் ,கிண்ணியா வலயக் கல்வி பணிப்பாளர் திருமதி முனவ்வரா நளீம்,கிண்ணியா சூரா சபை தலைவர் ஏ.ஆர்.ஏ.பரீட் உட்பட கல்வி உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்