ரணில், சஜித், கரு இணைந்து செயற்பட்டால்தான் வெற்றி! – அத்தநாயக்க தெரிவிப்பு

ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற வேண்டுமானால், ரணில், சஜித், கரு ஆகிய மூன்று தரப்பினரும் இணைந்து கூட்டாக செயற்பட வேண்டும்.”

– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஐக்கிய தேசியக் கட்சியில் அமைச்சர் சஜித்தை வேட்பாளராகக் கொண்டுவர வேண்டும் என கட்சி ஆதரவாளர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். அதைக் கட்சியின் தலைமைகள் ஏற்றுக்கொள்வது போன்று தெரியவில்லை.

எனது கருத்தின்படி, ஐக்கிய தேசியக் கட்சி தனியாகச் செயற்பட்டு வெற்றி பெற முடியாது. கூட்டணியாகச் செயற்பட்டாலேயே வெற்றி பெறலாம். இந்த இலக்கை நோக்கி கட்சியிலுள்ள மூன்று சக்திகளும் கூட்டாக இணைந்து செயற்பட வேண்டியுள்ளது” – என்றார்.

ஐ.தே.கவின் முன்னாள் பொதுச் செயலாளரான திஸ்ஸ அத்தநாயக்க கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து மஹிந்த ராஜபக்ச தரப்புப் பக்கம் தாவி மஹிந்தவுக்கு ஆதரவு வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்