எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் 50வீத வாக்கைப் பெறப்போவதில்லை

முஸ்லிம் வேட்பாளர் களமிறங்குவது சிறப்பு: கிழக்கு முன்னாள் முதல்வர் நஸிர் அஹமட்

எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் இம்முறை 50சதவீகித வாக்கைப் பெறப் போவதில்லை.
சிறுபான்மை மக்களின் வாக்கே ஜனாதிபதி யார் என்பதை உறுதி செய்யப்போன்றது. எனவே
முஸ்லிம்மக்கள் தமது சக்தி எத்தகையது என்பதைக் வெளிக்காட்டும் விதத்தில் ஜனாதிபதி வேட்பாளராக
முஸ்லிம் ஒருவரை நிறுத்தி அவருக்கு ஒட்டுமொத்தமாக தமது முதலாவது வாக்கை அளிக்கவேண்டும். இரண்
டாவது வாக்கை முஸ்லிம்களின் கோரிக்கைகளை ஏற்று அதற்கு உத்தரவாதம் அளிக்கும்வகையில்
செயற்படக்கூடிய பிரதான வேட்பாளருக்கு வழங்கவேண்டும். இத்தகைய நடவடிக்கையே சமகால
அரசியல்போக்கில் முஸ்லிம்களுக்கு சிறந்த பெறுபேற்றைத்தரும்; என்கிறார் கிழக்கு
மாகாண முன்னாள் முதல்வர் நஸிர் அஸமட்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:-
சமகால அரசியல் நிலையில்ரூபவ் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சிறுபான்மை மக்களின்
வாக்குகள் மிகமுக்கிய வகிபாகம் பெறுகின்றன. எனவேரூபவ் முஸ்லிம் மக்கள் தமது ஒட்டுமொத்தமான
10 இலட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை எவ்வாறு அளிக்கப் போகின்றார்கள் என்பது
முக்கியமானது. இந்தப் பொறுப்பை சரிவரஉணர்ந்து தமது பங்களிப்பைச் செய்யவேண்டியது
அவசியமாகின்றது.
கடந்த காலங்களில் நம்பிக்கை நிமித்தம் மேற்கொள்ளப்பட்ட உடன்பாடுகள்ரூபவ் உத்தரவாதங்கள்ரூபவ்
ஒன்றிணைந்த பங்களிப்புகள் அனைத்தும் முஸ்லிம்களைப் பெறுத்தவரையில் பாதகங்களையும்
ஏமாற்றங்களையுமே ஏற்படுத்தின. சமூகத்துக்கு நம்மையளிக்கும் விடயங்கள் எதுவுமே
நடக்கவில்லை. ஒரு இஞ்சி காணியைக் கூட விடுவிக்கமுடியாத நிலையும் சாதாரண சின்ன அரசியல்
அதிகாரத்தை பெற்றுக் கொள்ள முடியாத அவல நிலையுமே காணப்பட்டது.
இனியும் அதன் வழிநடப்பதற்கு நாம் முயற்சிக்கக்கூடாது. முஸ்லிம்கள் கோழை கள் அல்லர்
என்பதை நிரூயஅp;பிக்கும் விதத்தில் நாம் எமது அரசில்பாதையை வகுக்க வேண்டும். “சமூகத்தின்
தலைவிதியை எந்த சமூகமும் நிர்ணையிக்காத வரை அல்லாஹ{தலா அதை மாற்றமாட்டான்”
என்கிறதுகுர்ஆன். இதற்கான சந்தர்ப்ப மாகவே இம்முறை ஜனாதிபதி தேர்தல் அமைந்துள்ளது.
எனவே எமக்கான ஒரு வேட்பாளரை நாம் களம் இறக்கவேண்டும். ஸ்ரீல.முஸ்லிம் காங்கிரஸின் தலைவர்
ரவூப் ஹக்கீம் இதில் களமிறங்குவாரானால் அதுவும் சிறப்பானதே.

எமது அபிலாஷைகள் கோரிக்கைகள் எதிர்பார்ப்புகள் போன்றவற்றைச் சரிவரபுரிந்து
கொண்டு – ஏற்றுக்கொண்டு அவற்றுக்கு உறுதியான முறையில் உத்தரவாதம் அளி க்கக்கூடிய
ஜனாதிபதிவேட்பாளருக்கு நாம் ஆதரவளிப்பது முக்கியமானது. எனும் எமது ஒட்டுமொத்த –
ஒன்றித்த சக்தி எத்தகையது என்பதை நாம் அவர்களுக்கு காட்ட வேண்டியதும் அவசியம்.
எனவேரூபவ் ஜனாதிபதி வேட்பாளரான முஸ்லிமுக்கு எமது முதலாவது வாக்கை அளிக்கவேண்டும். பின்னர்
எமது கோரிக்கைளை ஏற்றுக் கொண்ட வேட்பாளருக்கு இரண்டாவது வாக்கை அளிக்கவேண்டும். காரணம்
முஸ்லிம் வேட்பாளர் பெற்றுக் கொண்ட அத்தனை வாக்குகளும் மற்றைய வேட்பாளருக்கும் கிடைக்கப்
பெற்ற தையும் இந்த வாக்குகள் மூலமாகத்தான் அவர் வெற்றி பெற்றார் என்பதையும் உறுதி
செய்யவேண்டியதும் அவசிமானது.
இந்த முக்கியத்துவத்தில் எமது வகிபாகம் எத்தனை சக்திமிக்கது என்பதை எடுத்தியம்பவே முஸ்லிம்
தமக்கான ஒரு வேட்பாளரை நிறுத்தி அவருக்கு தமது ஒட்டுமொத்த வாக்குகளை முதலில் அளித்து தமது
சத்தியை வெளிப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன் -என்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்