கதிர்காம கந்தனின் ஆடி வேல் திருவிழா நிறைபெற்ற போதிலும் பக்தர்களின் வரவில் குறைவில்லை.

இலங்கையின் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயங்களில்  ஒன்றான கதிர்காம கந்தனின் ஆடி வேல் பெருவிழா கடந்த மாதம் நடைபெற்றது.

இந்த ஆடி வேல் திருவிழாவினை காண்பதற்கு இலங்கையின் நாலா பாகங்களிலிருந்து பெருந்திரளான பக்தர்கள் கதிர்காமத்தினை நோக்கி படையெடுத்திருந்தனர்.

எனினும் தற்போது பாடசாலை விடுமுறை காலம் என்பதால் வழிபாடுகளை மேற்கொள்வதற்காக பெருந்தொகையான பக்தர்கள் கதிர்காமத்தினை நோக்கி வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
திருவிழா காலங்களை போல் பூசை செய்வதற்காக நீண்ட வரிசை காணப்படுவதுடன் பக்தர்கள் தமது நேற்றிக்கடன்களையும் நிறைவேற்றி வருகின்றனர்.

கதிர்காமப்பகுதியில் சன நெருக்கம் காணப்படுவதனால் பொலிஸார் மற்றும் ரானுவம் பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்தும் பலப்படுத்தியுள்ளனர்.

அதிகமாக மக்கள் கதிர்காமப்பகுதியில் நடமாடுவதனால் வர்த்தக நடவடிக்கைளும் சூடு பிடித்துள்ளன.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்