இப்போதைய அரசமைப்பில் இளையோர் அவநம்பிக்கை! – பிரதமர் ரணில் கூறுகின்றார்

அரசமைப்புத் தொடர்பாக இளைஞர்கள், யுவதிகள் நம்பிக்கை இழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது:-

“நாட்டின் அரசமைப்பு மற்றும் கொள்கைகளை மாற்றுவதற்கு நாம் முன்னிற்கின்றோம். தற்போதைய அரசியல் அடிப்படைக்கு மத்தியில் ஏனைய நாடுகளுக்கு சமமாக அபிவிருத்தி காண்பதற்கு எம்மால் முடியாது உள்ளது.

இந்தத் தாக்கத்தை ஏற்படுத்தும் பிரச்சினைகள் தொடர்பாக முக்கிய கவனம் செலுத்த வேண்டும். தற்போது உள்ள நடைமுறைகளை உடனடியாக மாற்ற வேண்டும்” – என்று குறிப்பிட்டுள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்