மக்களின் பிரச்சினைகளில் ஜனாதிபதி கவனம் செலுத்தியிருக்கலாம் – நாமல்

ஜனாதிபதி மைத்திரி, உட்கட்சி பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தனது நேரத்தை செலவிட்டமைக்கு பதிலாக பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதில் கவனம் செலுத்தியிருக்கலாம் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பதுளையில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஜனாதிபதியின் பதவிக்காலம் மூன்று மாதங்களில் முடிவடையவுள்ளது. அதன்பிரகாரம் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன என கூறினார்.

குறிப்பாக சுதந்திரக் கட்சி மாகாண சபைத் தேர்தலை, புதிய முறையின் கீழா அல்லது பழைய முறையின் கீழா நடத்துவது என்பது குறித்து சட்ட ஆலோசனையை நாடியுள்ளது என தெரிவித்த அவர் இந்த முயற்சியினையே ஜனாதிபதியும் மேற்கொண்டு வருகின்றார் என்றும் குற்றம் சாட்டினார்.

இதேவேளை ராஜபக்ஷ ஆட்சியினைப் போலல்லாமல் ஜனநாயகத்தை உறுதி செய்வோம் என்று கூறி தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. இருப்பினும் அவர்கள் தேர்தல்களை இரண்டரை ஆண்டுகள் தாமதப்படுத்தினர். தேர்தல்களை நடத்துவது ஜனநாயக உரிமை என நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்