வலி.மேற்கு பிரதேசசபை உறுப்பினர் சமாதான நீதிவானாக சத்தியபிரமானம்

வலி.மேற்கு பிரதேசசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ச.ஜெயந்தன் அகில இலங்கை சமாதான நீதிவானாக அண்மையில் சத்தியப்பிரமானம் செய்துகொண்டார்.

சமாதான நீதிவானாக இவர் பதவியேற்றமைக்கான கௌரவிப்பும் இரண்டு வீதிகள் தார்வீதிகளாக மாற்றம் பெற்று மக்கள் பாவனைக்காகத் திறந்துவைக்கும் நிகழ்வும் அண்மையில் தொல்புரத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனும் சிறப்பு விருந்தினராக வலி.மேற்கு பிரதேசசபை தவிசாளர் த.நடனேந்திரனும் கலந்துகொண்டனர்.

தார் வீதியாக மாற்றம் பெற்ற இரு வீதிகளையும் நாடாளுமன்ற உறுப்பினர் மக்கள் பாவனைக்காகத் திறந்துவைத்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்