வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களை சந்தித்த மாவை!

வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் சகல கட்சி பிரதிநிதிகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசா சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பு இன்று 19 ஆம் திகதி வலி.வடக்கு பிரதேசசபை மாநாட்டு மண்டபத்தில் வலி.வடக்கு பிரதேசசபை தவிசாளர் சோ.சுகிர்தன் தலைமையில் நடைபெற்றது.

வலி.வடக்கு பிரதேசசபையின் ஜூலை மாத அமர்வு சபையில் நடைபெற்றவேளை, வலி.வடக்கைப் பிரதிநித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் தமது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசா என்பதால் ஏகமனதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசாவைச் சந்தித்து, தமது பிரதேசம் தொடர்பான பிரச்சினைகளை விளக்குவதற்கு ஏற்பாடு செய்யுமாறு தவிசாளர் சோ.சுகிர்தனிடம் கேட்டுக்கொண்டனர்.

அவர்களின் கோரிக்கைக்கு அமைவாகவே இன்று நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசா வலி.வடக்கு பிரதேசசபைக்கு விஜயம் செய்து, அங்குள்ள உறுப்பினர்களுக்கு அபிவிருத்தி, காணி விடுவிப்பு தொடர்பான விளக்கங்களை அளித்தமையுடன், அவர்களால் எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்