மட்டுவில் கலைவானி முன்பள்ளி விளையாட்டும், பூங்கா திறப்பும்!

யாழ் தென்மராட்சி மட்டுவில் மத்தி கலைவாணி முன்பள்ளி பாலர்களுக்கான விளையாட்டு விழாவும், சிறுவர் பூங்கா திறப்பு விழாவும்  கடந்த 15 கடந்த முன்பள்ளி முன்றலில் பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது.

முன்பள்ளி தலைவரும், கிராம அபிவிருத்திச் சங்க தலைவருமாகிய திரு ச. உமாமகேஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், இலங்கை தமிழரசுக்கட்சியின் தொகுதிக் கிளை தலைவரும் சட்டத்தரணியுமான திரு கே. சயந்தன் அவர்களும் சிறப்பு விருந்தினராக இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட வாலிபர் முன்னனியின் பொருளாளரும், முன்னாள் நகரசபை உறுப்பினருமான திரு த. சுதர்சன் அவர்களும் கெளரவ விருந்தினர்களாக கிராம சேவகர் திரு பா. சுபாசன் அவர்களும், அபிவிருத்தி உத்தியோகத்தர் த. வனிதா அவர்களும், சமுர்த்தி உத்தியோகத்தர் திரு வி. நாஜேந்திரன் அவர்களும், பொதுச்சுகாதார உத்தியோகத்தர் திரு க. கிருஷ்ணறக்சன் அவர்களும் மற்றும் சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் திரு க. வாமதேவன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இந்நிகழ்வில் பழம் பொறுக்குதல், பாம்பு ஓட்டம், முயல் பாய்ச்சல் போன்ற பல சிறார்களின் விளையாட்டுக்களும் இடம்பெற்றதுடன் சிறார்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன் அமரர் கனகலிங்கம் கார்த்திகாவின் நினைவாக புனரமைக்கப்பட்ட பூங்கா நாடா வெட்டி திறக்கப்பட்டதன் பின் முன்பள்ளிக்கு கையளிக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்