குமரநகர் தாச்சிச் சுற்றுப் போட்டிக்கு விருந்தினர்களாக சிறிதரன், சயந்தன்!

கைதடி குமரநகர் சனசமூக நிலையத்தின் தாச்சிச்சுற்றுப் போட்டி அண்மையில் நகுலன் கலை அரங்கு முன்றிலில் நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனும் சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி கேசவன் சயந்தனும் கலந்து சிறப்பித்தனர்.

விருந்தினர்கள் தாச்சிச் சுற்றுப்போட்டியை ஆரம்பித்து, விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியைக் கண்டுகளித்து, பின்னர் வெற்றிபெற்ற அணிகளுக்கான வெற்றிக் கேடயங்களையும் வழங்கிவைத்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்