சதொச நிறுவனத்தில் ஊழல்: விமல் பெரேராவிற்கு ஒரு வரு சிறைத் தண்டனை

சதொச நிறுவனத்தின் முன்னாள் பதில் பொதுமுகாமையாளர் விமல் பெரேராவிற்கு ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2002 ஆம் ஆண்டு அரிசி இறக்குமதி செய்யும்போது அரசாங்கத்திற்கு 4 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக இலஞ்ச ஊழல் அணைக்குவாள் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டமையினால் 50,000 ரூபாய் அபராதம் விதித்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்