அவுஸ்ரேலியா செல்ல முயன்ற 10 பேர் கைது

கடல் வழியாக அவுஸ்ரேலியா செல்லும் நோக்கில் வென்னப்புவ பகுதியிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் சிலாபத்தைச் சேர்ந்த 10 பேரையே, நேற்று (திங்கட்கிழமை) இரவு கைது செய்ததாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வென்னப்புவ, நைனாமடம் பகுதியிலுள்ள வீட்டில் சந்தேகத்துக்கு இடமான முறையில் சிலர் தங்கியிருப்பதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதனடிப்படையில் சுற்றிவளைப்பினை அவர்கள் மேற்கொண்டப்போதே இவர்கள் கைது செய்யப்படடுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் நீதிமன்றத்தில் அவர்களை முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்