மரண தண்டனைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் நிராகரிப்பு – உயர் நீதிமன்றம்

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கும் வர்த்தகர்களுக்கும் மரண தண்டனையை அமல்படுத்துவதற்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த மூன்று மனுக்களும் நிராகரிக்கப்பட்டதாக இன்று (செவ்வாய்க்கிழமை) உயர் நீதிமன்றம் நாடாளுமன்றத்திற்கு தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதனை அடுத்து மரண தண்டனை விதிப்பதற்கு தடை விதிக்குமாறு கோரி பல மனுக்கள் தாக்கல் செய்யப்ட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்