மாகாணசபைத் தேர்தல் பழையமுறையில்; தனிநபர் பிரேரணை சுமனால் சமர்ப்பிப்பு!

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு வழிசெய்யும் விதத்தில் மாகாணசபைத்தேர்தல் திருத்தச் சட்டமூலம் ஒன்றைத் தனிநபர் பிரேரணையாக முன்வைத்திருக்கின்றார் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப் பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான ஜனாதிபதி  சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்.

இதுவரை காலமும் 1988 ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல் சட்டத் தின் கீழேயே மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட்டுவந்தன.

ஆனால் புதிய தேர்தல் முறைமை ஒன்றை நடை முறைப்படுத்தும் இலக்கோடு 1988 ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தை ரத்துச் செய்யும் விதத்தில் 2017 ஆண்டு செப்ரெம் பர் 21ஆம் திகதி, 2017 ஆம் ஆண்டின் 7ஆம் இலக்கமாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

இதனால் இதுவரையில் நடைமுறையில் இருந்த மாகாண சபைகள் தேர்தல் சட்டம் 2017 செப்ரெம்பரில் ரத்தானது.

ஆனால் கொண்டுவரப்பட்ட புதிய சட்டம் அந்தத் தேர்தல்களை நடத்துவதற்கான முழு ஏற்பாடுகளையும் கொண்டிருக்கிவில்லை.

அந்தச் சட்டத்தின் கீழ் விகிதாசாரப் பிரதிநித்துவம் மற்றும் தொகுதிவாரி கலந்த தேர்தல் முறை பிரேரிக்கப்பட்டிருந்தமையால் அச்சட்டத்தின் கீழ் மாகாணங்கள் தோறும் தொகுதிகள் பிரிக்கப்பட்டு எல்லை நிர்ணயம் செய்யவேண்டிருந்தது. ஆனால் எல்லை நிர்ணயப் பணி பூர்த்தி யாகவில்லை .

அதனால் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த முடியாத நிலையில் அது இழுபடுகின்றது.

இந்தப் பின்புலத்தில்தான் 2017 செப்ரெம்பரில் ரத்தான 1988 ஆம் ஆண்டின் 2ஆம் இலக்கமாகாணசபைகள்தேர்தல் சட்டத்தைத் திரும்பக் கொண்டு வருவதற்கான தனிநபர் பிரேரணையைநேற்றுநாடாளுமன்றச் செயலாளர் நாயகத்துக்கு அனுப்பிவைத்திருக்கின்றார் சுமந்திரன்.

பழைய சட்டத்தை அப்படியே மீளக்கொண்டு வருவதற்கு வழிசெய்யும் இந்தப்பிரரேரணை ஒற்றைப் பக்கத்தில் தனி ஒரு சட்டமூலமாக வரையப்பட்டு தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிப் பிரதிகளுடன் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு சுமந்திரனால் அனுப்பப்பட்டுள்ளது. 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்