அளவெட்டி விளையாட்டுக் கழகத்துக்கு பிரதேசசபை உறுப்பினரால் உபகரணம்!

அளவெட்டி பத்தானை விளையாட்டுக் கழகத்துக்கு அந்த வட்டாரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறை தொகுதி பொருளாளருமாகிய லயன் செல்வக்குமரன் விஜயராஜ் தனது சொந்த நிதியில் இருந்து விளையாட்டு உபகரணங்களை நேற்று வழங்கிவைத்தார்.

இந்த நிகழ்வில் வலி.வடக்கு பிரதேசசபையின் தவிசாளர் சோ.சுகிர்தன், உறுப்பினர் லயன் சி.ஹரிகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தச் சத்திப்பில் கலந்துகொண்ட பாரதிதாசன் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள், தமது மைதானத்தை ஒளியூட்டித் தருமாறு தமது பிரதிநிதியிடமும் தவிசாளரிடமும் கோரிக்கை முன்வைத்தனர். அதற்கு தவிசாளர் உடனடியாக நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதியளித்தார். அத்துடன், தனியார் காணியிலே தாம் விளையாடுவதாகவும் தமக்கு ஒரு பொது மைதானம் தேவை எனவும் அளவெட்டி பிரதேசத்திலே விளையாட்டு மைதானம் இல்லை என்றும் தவிசாளரிடம் தெரிவித்தமைக்கு, அவர்கள் தற்போது பாவிக்கின்ற மைதானத்தை பொது விளையாட்டு மைதானமாக பெறுவதற்கு ஏற்ற ஒழுங்குகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்