27ஆவது நல்லைக்குமரன் நூல் வெளியீட்டில் முதல்வர் பிரதம விருந்தினர்!

யாழ் மாநகரசபையின் சைவசமய விவகாரக் குழுவினால் நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோட்சவத்தை முன்னிட்டு வருடாவருடம் வெளியிடப்படும் நல்லைக்குமரன் மலர் வெளியீட்டின் 27 ஆவது இதழ் நேற்று (19) யாழ் மாநகர நாவலர் மண்டபத்தில் வெளியீடு செய்யப்பட்டது.

இந் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்ததுடன், விசேட உரை  ஒன்றினையும் நிகழ்த்தினார்.

நிகழ்வில் இவ்வருடத்திற்கான ‘யாழ் விருது’ பேராசிரியர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேலும் இந் நூல் வெளியீட்டில் முதல் பிரதியை பதிப்பாசிரியர் ந.விஜயசுந்தரம் அவர்கள் வெளியிட்டுவைக்க தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் உப தலைவர் எஸ். அருளானந்தசிவம் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

குறித்த நிகழ்வில் பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடாத்தப்பட்ட போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் நல்லை ஆதீன குருமுதல்வர், மதகுருமார்கள், சமயத் தலைவர்கள், யாழ் மாநகர சைவசமய விவகாரக்குழு உறுப்பினர்கள், யாழ் மாநகரசபை உறுப்பினர்கள், மாநகர பிரதி முதல்வர், மாநகர ஆணையாளர், பிரதி ஆணையாளர், நல்லூர் பிரதேச செயலர், மாநகரசபை உத்தியோகத்தர்கள், போட்டிகளில் வெற்றியீட்டிய வெற்றியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்