நாவிதன்வெளி பிரதேச செயலக கலாசார பிரிவின் ஏற்பாட்டில் கவியரங்கம்

பாறுக் ஷிஹான்

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணை மற்றும் வழிகாட்டலின்கீழ் நாவிதன்வெளி பிரதேச செயலக கலாசார பிரிவின் ஏற்பாட்டில் உலக கவிதை தினத்தை முன்னிட்டு   நடாத்தும் தேசிய கலையின் உணர்வு மிக்க ரிதம் என்ற தொனிப் பொருளுக்கமைவாக   “மனிதனாய் மீண்டெழுவோம் ” என்ற தலைப்பில் கவியரங்கம் செவ்வாய்க்கிழமை (20)  நாவிதன்வெளி பிரதேச  கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வானது கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி எஸ்.அக்கிலா பானு ஒருங்கிணைப்பில் பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமை தாங்கியதுடன் சிறப்பு அதிதிகளாக நாவிதன்வெளி உதவி பிரதேச செயலாளர் என்.நவநீதராஜன் மற்றும் மாவட்ட கலாசார உத்தியோகத்தர்  ரீ.என் றின்சானும் கலந்து சிறப்பித்தனர்.
இதில் 8 க்கும் மேற்பட்ட கவிஞர்கள் பங்கு பற்றி தத்தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.கவியரங்கின் நடுவர்களாக கவிஞர் மருதமுனை விஜிலி, ஓய்வு பெற்ற நிர்வாக உத்தியோகத்தர் எம்.பி.ஏ ஹசன் ,கவிஞர் அக்கரைப்பாக்கியன், கவிஞர் ஏ.ஓ அனல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்