கிழக்கு மாகாண ஆளுநர் சியோன் தேவாலயத்திற்கு விஜயம்

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநர் ஷான்  விஜயலால் டி  சில்வா  (20) திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார்.
கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி குண்டு தாக்குதலினால் சேதமாக்கப்பட்ட தேவாலயத்தின் நிர்மாணப் பணிகள் தற்பொழுது முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் அதன் பணிகளை பார்வையிடுவதற்காக அவர் சென்றுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சிவன் தேவாலயத்தின் நிர்மாணப் பணிகளை துரித கதியில் நிறைவு செய்யுமாறும் அடுத்த தேர்தலுக்கு முன்னர் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் நிர்மாணப் பணிகளை முடிவுறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கிழக்கு மாகாண ஆளுநர் இதன்போது தெரிவித்தார்.
இவ் விஜயத்தின் போது கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் சரத் அபே குணவர்தன, கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் பொலிஸ் உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்