ஸ்ரீதரன் எம்.பி.யின் வீட்டை அண்மித்த பகுதியில் படையினர் குவிப்பு!

கிளிநொச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனின் வீட்டை அண்மித்த பகுதியில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சி – வட்டக்கச்சி பகுதியிலேயே இவ்வாறு இன்று (புதன்கிழமை) அதிகாலை படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்வதற்காகவே இவ்வாறு படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இதுவரையில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எவையும் வெளியிடப்படவில்லை.

மேலும் குறித்த பகுதியில் தேடுதலை மேற்கொள்ள கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை குறித்த பகுதிக்கு நோயாளர் காவு வண்டியும் வரவழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்