பேஸ்புக் பயனாளிகளுக்கு அவசர எச்சரிக்கை!

பாதுகாப்பற்ற பேஸ்புக் கணக்குகளை ஊடுருவதற்கு சில குழுக்கள் முயற்சிப்பதாக இலங்கை தகவல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, கடந்த சில வாரங்களுக்குள் இந்தக் குழுக்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக அந்த சங்கம் மேலும்  தெரிவித்துள்ளது.

Phishing Attack எனும் முறையிலேயே இவ்வாறு பாதுகாப்பற்ற பேஸ்புக் கணக்குகள் ஊடுருவப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால், பேஸ்புக் கணக்குகளை பாதுகாப்பான முறையில் வைத்துக்கொள்ளுமாறு பயனாளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்