கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் பொலிசார், படையினர், விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளது

கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் பொலிசார், படையினர், விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் தேடுதல் ஒன்றுக்காக குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களின் வீடு அமைந்துள்ள பகுதிக்கு முன்பாகவே இவ்வாறு பாதுகாப்பு தரப்பினர் குவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இதற்காக கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை குறித்த பகுதியில் நோயாளர் காவு வண்டியும் அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கதாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்