எதிர் வரும் தேர்தல் நிலையான இருப்பை உறுதிப்படுத்தும் , இதனை சிறுபான்மை சமூகமே தீர்மானிக்க வேண்டும்-பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப்

எதிர்வரும் தேர்தல்கள் சிறுபான்மை சமூகம் தீர்மானிக்கின்ற சக்தியாக இருக்க வேண்டும் .
ஜனாதிபதித் தேர்தல்,பாராளுமன்ற தேர்தல் என்பவற்றை சிறுபான்மை வாக்குகள் மூலமே அரசாங்கத்துக்கு சரியான முடிவுகளை வழங்குகிறது என துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு இன்று (21) கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்
வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் நாம் சிறுபான்மை சமூகத்தை பாதுகாத்து அரவனைக்ககக் கூடிய எமது இருப்பை உறுதிபடுத்தக்கூடியவர்களுக்கு பின்னால்தான் நிற்க வேண்டும் இதற்காக அமைச்சர் றிசாத் பதியுதீன் கிண்ணியாவில் அண்மையில் பங்கேற்ற மாபெரும கூட்டத்தில் உள்ள சனநெருக்கம் இந்த நாட்டினுடைய ஜனாதிபதி பிரதமர் மற்றும் மஹிந்த ராஜபக்ச போன்றோர்களுக்கு காட்டுவதற்காகவே கூட்டம் இடம் பெற்றது.
 முஸ்லிம்கள் யார் பின்னால் நிற்கிறார்கள் தேர்தலிலும் யார் பின்னால் நிற்பார்கள் என்பதை இதில் இருந்து  உணர்ந்து கொள்ள முடியும் . இனவாதங்களை கக்கி வாக்குகளை தேட முயற்சிப்பது தோல்வியில் முடிவடையும் மஹிந்த அரசாங்கம் யுத்தத்தை வெற்றி கொண்ட போதும் ஏன் கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார்  என்பதை இந்த நாட்டில் இனவாதத்துக்கு இடமில்லை என்பதை எடுத்துக்காட்டியிருக்கிறது.
இனவாதத்தை விதைத்ததால்தான் இதற்கான தகுந்த பாடத்தை மக்கள் அதாவது முஸ்லிம் சமூகம் கற்றுக் கொடுத்துள்ளது .
நாட்டில் நடை பெறுகின்ற ஜனாதிபதி தேர்தல் பாராளுமன்ற தேர்தல்களை சிறுபான்மை சமூகமே தீர்மானிக்கும் .அமைச்சர் றிசாத் கை  நீட்டுகின்ற வேட்பாளருக்கே இம் முறை ஆதரவு வழங்கப்படும் . முஸ்லிம்களுக்கான பிரச்சினைகள் சோதனைகள் எங்கு இடம் பெற்றாலும் அதற்காக நானும் எமது தலைமையின் குரலும் உயர்த்தப்படும்.
இதற்காக நாம் அனைவரும் ஓரனியில் நின்று ஒருமித்து செயற்பட வேண்டும் .மொட்டு,கதிரை என்ற கட்சி பாகுபாடின்றி உரிமைகளுக்காக நிம்மதியாக மாவட்ட, தேசிய உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்காக செயற்பட வேண்டும் .
முஸ்லிம் சமூகம் பல சோதனைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளது இதனை வெற்றி கொள்ள வருகின்ற தேர்தல் நிலையான இருப்பை உறுதிப்படுத்தும் தேர்தலாக அமைய நாம் அனைவரினதும் ஒத்துழைப்பு தேவை இதற்காக ஒன்றாக கூட்டினைந்து செயற்படுவோம் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்