நல்லூர் ஆலயத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

நல்லூர் ஆலயத்தில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்றதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழில் இன்று காலை பெய்த மழை காரணமாக அங்கு மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நல்லூர் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் மின்சார தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்