பயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!

பயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதான 14 பேரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அதற்கமைய அவர்களை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு கல்முனை மாவட்ட நீதிபதியும் கல்முனை நீதிமன்ற பதில் நீதிபதியுமான பயாஸ் றஸாக் முன்னிலையில் இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது பல்வேறு சந்தர்ப்பங்களில் குற்றப்புலனாய்வு பிரிவினர் மற்றும் பாதுகாப்பு தரப்பினர்களால் அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 14 சந்தேகநபர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

குறித்த சந்தேகநபர்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த 14 பேரையும் செப்டம்பர் 4ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

சந்தேகநபர்கள் அனைவரும் காத்தான்குடி, கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, சம்மாந்துறை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களென்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்