மீன்பிடி வலைகளுக்குள் ஒரு வகையான வழு மீன்கள்

அம்பாறை மாவட்டம்   கல்முனை  கடற்பரப்பில்  கரைவலை தோணி மீனவர்களின்  வலைகளுக்குள் ஒரு வகையான வழு எனப்படும் (Jelly fish) மீன்களுக்குள் கலந்து பிடிபடுகின்றன.

குறிப்பாக கீரீ மற்றும் பாரைக்குட்டி மீனினங்கள் அதிகளவில் பிடிபடும் போது  இவ் வகை மீன்கள் அதிகளவாக  பிடிபடுகின்றது.இதன் காரணமாக மீனவர்கள் வலையில் இருந்து அகற்றுவதற்கு பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

இதே வேளை அண்மைக்காலமாக இப்பகுதியில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தினால் கடலில் திடிரென இவ்வாறான    வழு எனப்படும்  மீன்களுக்குள் கலந்து பிடிபடுவதாக  மீனவர்கள் குறிப்பிட்டனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்