மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் காணப்படும் குறைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் – சார்ள்ஸ்

மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் காணப்படும் குறைகளை நிவர்த்திசெய்ய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் சீடீ ஸ்கேன் இல்லாமல் இருந்தது.

இதுதொடர்பாக பிரதமரின் கவனத்துக்கு கொண்டுவந்தபோது அதனை பெற்றுக்கொள்ள பிரதமர் 8மில்லியன் ரூபாய் ஒத்துக்கியுள்ளார்.

அதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவிக்கின்றேன். குறித்த வைத்தியசாலையில் சீடி ஸ்கேன் இல்லாததன் காரணமாக நோயாளர்கள் அந்த ஸ்கேனை செய்துகொள்ள யாழ்ப்பாணம் அல்லது வுவுனியாவுக்கே செல்லவேண்டும்.

அத்துடன் சீடி ஸ்கேன் குறித்த வைத்தியசாலைக்கு பெற்றுக்கொள்ளப்பட்டால் அதனை பாதுகாப்பாக அங்கு வைப்பதற்கு அறை இல்லாமல் இருக்கின்றது.

அதனால் அதற்கான அறையொன்றை நிர்மாணித்துக்கொள்ள தேவையான வசதிகளை தரவேண்டும். அதேபோன்று சிறுவர் வார்ட்டில் அடிப்படை தேவைகள் நிறைய காணப்படுகின்றன. அந்த குறைகளை நிவர்த்திசெய்ய போதுமான நிதி ஒதுக்கித்தரவேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளா

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்